சமையலும் சுக்கிரனும்
Page 1 of 1
சமையலும் சுக்கிரனும்
வணக்கம் நண்பர்களே !
சமையலும் சுக்கிரனும் என்ற தலைப்பில் இப்பதிவில் சில தகவல்களை பார்க்கலாம். என்னடா இது சமையல் எல்லாம் சொல்லுகிறார் என்று நினைக்க வேண்டாம். சோதிடம் என்பது அனைத்தும் உள்ளடங்கிய ஒரு பொக்கிஷம்.
திருமணத்தில் சுக்கிரன் பங்கு முக்கியமானது. இவர் சுபதன்மையில் இருந்தால் திருமணம் இளம் வயதில் நடைபெறும். இவர் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் கெட்டால் குழந்தை பாக்கியமும் தடைப்படும்.
நல்ல ருசியான சமையலுக்கு இவர் தான் காரணம். தம்பதிகளுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மனைவி நல்ல சமைத்து அதனை கணவனுக்கு கொடுக்கும் போது அதனை சாப்பிட்டால் அவன் மனம் மாறி அவளை விரும்புவான். தாம்பத்திய வாழ்க்கையிலும் சமையல் என்பது இன்றிமையாதது.
இன்று இருக்கும் அவசர வாழ்க்கையில் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலும் இருவரும் சாப்பிடுவது ரெஷ்டாரண்ட்டுகளின் தான். இது இருவருக்கும் பாசத்தை உருவாக்காது. ஏதோ ஒரு நாட்கள் என்றால் பரவாயில்லை தினமும் இப்படி சாப்பிடும் ஏதாவது சிறு சண்டை வந்தாலே போதும் இருவரும் சம்பாதிக்கிறோம் அப்புறம் எதற்கு இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று பிரிந்துவிடுவார்கள்.
கடந்த காலங்களில் மனைவியின் வேலை சமையல் செய்வது தான் இன்று அப்படி இல்லை இது ஏன் அப்படி அந்த காலத்தில் வைத்திருப்பார்கள் என்றால் ஒன்று இவர் செய்வார் வேறோன்றை அவர் செய்வார் என்று பிரித்து வைத்தார்கள்.
கணவனின் தேவையை மனைவி பூர்த்தி செய்யவேண்டும் மனைவியின் தேவையை கணவன் பூர்த்தி செய்யவேண்டும். கணவன் சம்பாதிப்பான் மனைவி சமையல் செய்வாள். இன்று இது அப்படியே மாறிவிட்டது மனைவி சம்பாதிப்பாள் கணவன் சமைப்பான் என்ற நிலை வந்துவிட்டது அல்லது இருவரும் வேலைக்கு சென்று உணவங்களில் சாப்பிடுகிறார்கள்.
நான் சமையலை கற்றுக்கொள்ளும் போது என்னுடைய அம்மா டேய் சமையலை கற்றுக்கொள்ளாதே அப்புறம் பொண்டாட்டியின் அருமை தெரியாது என்று சொல்லுவாங்க அது உண்மை தான்.
பல பெண்களுக்கு சமைக்க தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். நான் ஒரு சில நேரங்களில் நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவது உண்டு அல்லது உறவினர்களின் வீடுகளில் சாப்பிடுவது உண்டு அப்படி சாப்பிடும் போது ஏன்டா சாப்பிட்டோம் என்ற நிலை ஏற்படும் அவ்வளவு கொடுமையாக அந்த சாப்பாடு இருக்கும். இது எதனால் என்றால் அந்த பெண்ணிற்க்கு சுக்கிரன் கெட்டுவிட்டது என்ற அர்த்தம் தான் வேறு ஒன்றும் இல்லை.
பொதுவாக அம்மாவின் சமையல் ருசியாக இருக்கும் அது ஏன் என்றால் அம்மா சமைக்கும் போது பாசத்தோடு சமைப்பாள். இப்பொழுது கணவனுக்கு சமைப்பது எல்லாம் வெறுப்போடு சமைக்கிறார்கள் அதனால் தான் அனைத்தும் கெடுகிறது.
ஒரு பெண்ணை திருமணத்திற்க்கு பொருத்தம் பார்க்கும் போது சுக்கிரனின் நிலைமையும் கூர்ந்து கவனித்து பொருத்தத்தை சேர்க்க வேண்டும். சுக்கிரன் கெட்ட பெண்களுக்கு என்ன செய்யவது கணவன் சமையலை கற்றுக்கொள்ள வேண்டியது தான்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum