வாழைப்பழம் படைப்பது ஏன்?
Page 1 of 1
வாழைப்பழம் படைப்பது ஏன்?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' . வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில் மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும் பயனில்லை என்பர். திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம் காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள். நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
» தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
» வாழைப்பழம் வாழைப்பழம்உலகிலேயே அதிகளவு பயன்படும் பழம் வாழைப்பழம் தான். எங்கேயும் எப்போதும் கிடைக்கும் எளிமையான வாழைப்பழம் ஒரு பரிபூரண உணவு. வாழைப்பழம், வாழைத்தார் (குலை), குலை தள்ளிய வாழை மரம், வாழை இலை இவை இல்லாத கல்யாணமோ, மற்ற மங்கல நிகழ்ச்சிகளோ கிடையாது
» பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது?
» இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum