தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.

Go down

நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம். Empty நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.

Post  ishwarya Mon May 27, 2013 5:16 pm

கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரானது.

தமிழ் பதிப்பு கடந்த 25ம் திகதி தமிழகம், புதுவை தவிர மற்ற மாநிலங்களில் வெளியானது. இங்கு முஸ்லிம்கள் எதிர்ப்பினால் அரசு தடை விதித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்இந்தியாவின் பல பகுதிகளில் தமிழ் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

விஸ்வரூபம் படத்தின் இந்தி பதிப்புக்கான டப்பிங், மிக்சிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் கடந்த சில வாரங்களாக முழு வீச்சில் நடந்தன.

தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்து நாளை திரைக்கு வருகிறது.

வடஇந்தியாவில் மொத்தம் 800 தியேட்டர்களில் இந்தி விஸ்வரூபம் படம் திரையிடப்படுகிறது.

மும்பை நகரில் ஏராளமான மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன. இவை அனைத்திலும் விஸ்வரூபம் திரையிடப்படுகிறது.

டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நொய்டா, சாஜியாபாத், குர்கான், பரீதாபாத் ஆகிய இடங்களில் 19 திரையரங்குகளில் விஸ்வரூபம் நாளை திரையிடப்படுகிறது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள விஸ்வரூபம் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் நொய்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் ஒரே நாளில் 12 காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், கல்கத்தா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், ஒரிசா, சதீஷ்கர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விஸ்வரூபம் நாளை திரையிடப்படுகிறது.

இந்தி நடிகர், நடிகைகள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் முதல் காட்சியில் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

இது குறித்து நடிகர் சல்மான்கான் கூறுகையில், கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்ப்பேன் என்றார்.

விஸ்வரூபம் படத்தின் இந்தி பதிப்பு வெளிநாடுகளிலும் திரையிடப்படுகிறது. தமிழில் இப்படம் திரையிடப்பட்டுள்ள அண்டை மாநிலங்களிலும் இந்தி விஸ்வரூபம் வருகிறது.

விஸ்வரூபம் இந்தியில் வெளியாவதையடுத்து கமலஹாசன் மும்பை புறப்பட்டு சென்றார்.

படத்தை திரையிடும் திரையரங்க விபரங்கள், பிரிண்ட்கள் போடும் பணிகள் போன்றவற்றை முன்நின்று கவனிக்கிறார். இந்தி நடிகர், நடிகைகள், விநியோகஸ்தர்களையும் சந்தித்து பேசுகிறார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum