தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா

Go down

ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா Empty ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா

Post  birundha Sat Apr 06, 2013 9:04 pm


ஆலங்குடி-திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். குருப்பெயர்ச்சி விழா `குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். குரு வருள் இருந்தால் தான் இறைவனின் திருவருள் கிடைக்கும் என்பது பழமொழி. நவக்கிரகங்களில் முதன்மையானதாக கருதப்படுவது குரு ஆவார். மேலும் சுபக் கிரகமாக குருபகவான் திகழ்கிறார்.

ஒருவருக்கு தலைமை பதவி, அதிகாரம், செல்வம், கல்வி,ஓழுக்கம், பிள்ளைபேறு ஆகியவை குரு பகவானின் கருணை பார்வை மூலமே கிடைக்கிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு ஆண்டு காலம் தங்கி இருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி நாளை (17- ந் தேதி) நாளை மாலை 6.27 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குருபெயர்ச்சி தனி சிறப்பு பெறுகிறது. அதாவது குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமையில் பெயர்ச்சியாகிறது. இந்த குருபெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். மற்ற ராசியினருக்கு கெடு பலன்குறையும் என்று கூறப்படுகிறது.

ஆலங்குடி கோவில்.......

தமிழகத்திலேயே முதன்மை வாய்ந்த குரு பரிகார தலமாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு குரு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குருபெயர்ச்சி விழாவை யொட்டி கடந்த 7- ந்தேதி முதல் 14- ந் தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 23-ந் தேதி முதல் ஜுன் 13-ந் தேதி வரை லட்சார்ச்சனை நடை பெறுகிறது. லட்சார்ச்சனை கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரசாதமாக பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளியினால் செய்யப்பட்ட குருபகவான் டாலர் வழங்கப்படுகிறது. நாளை மாலை குருப் பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை முதலே குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெறுகிறது.

பின்னர் நாளை மாலை குருபெயர்ச்சி நேரத்தில் குருபகவானுக்கு பால், இளநீர், தேன், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார். குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று முதலே குவிய தொடங்கியுள்ளனர்.

சிறப்பு பஸ்கள் குருபெயர்ச்சி விழாவை யொட்டி ஆலங்குடிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை,திருவாரூர், கும்ப கோணம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களுக்கு தேவையாந குடிநீர் வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் 200 போலீசார் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

திட்டை கோவில்.............

தஞ்சை மாவட்டம் திட்டையில் குருபரிகார தலமாக வசிஷ்டேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.இக்கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குருப் பெயர்ச்சி விழாவை யொட்டி கடந்த 30- ந்தேதி லட்சார்ச்சனை நடந்தது. நாளை குருபெயர்ச்சி விழாவையொட்டி அதிகாலை முதலே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகள்கள் , தீபாராதனை நடக்கிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வந்து குருபகவானை தரிசிக்கின்றனர். இக்கோவிலில் சிறப்பு பரிகார ஹோமங்கள் அடுத்த மாதம் (ஜுன்) 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதற்கு கட்டணம் ரூ.500 ஆகும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அர்ச்சனை மற்றும் சங்கல்பம் செய்து பிரசாதத்துடன் 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குரு பகவான் படம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்து கொண்டு குருபகவானின் அருளை பெறலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருபெயர்ச்சி விழாவை யொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை தக்கார் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா
» ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா
» ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
» ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
» முருகன் கோவில்களில் நாளை ஆடிக் கிருத்திகை விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum