தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தானில் முஷரப்பை கொல்ல முயன்ற 2 பேர் கைது

Go down

பாகிஸ்தானில் முஷரப்பை கொல்ல முயன்ற 2 பேர் கைது Empty பாகிஸ்தானில் முஷரப்பை கொல்ல முயன்ற 2 பேர் கைது

Post  meenu Mon Apr 01, 2013 2:32 pm

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (68). கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் லண்டனில் தங்கி இருந்தார். தற்போது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற மே 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் திரும்பினால் அவரை கொலை செய்வோம் என தலிபான் தீவிரவாதிகள் ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தனர். அதையும் மீறி பாகிஸ்தான் திரும்பிய அவர் தற்போது ராவல்பிண்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட திட்ட மிட்டுள்ளார். தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் அவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. ராவல்பிண்டியில் முஷரப் வீடு உள்ள அடியலாரோடு பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களது பெயர் சித்திக் கயாவி. ஷாகீர் என தெரியவந்தது. இவர்களை ஒரு தனி இடத்தில் வைத்து உளவுத் துறையினர் விசாரித்தனர்.

அப்போது முஷரப்பை கொலை செய்ய வந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் இருவரும் காஷி என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து 6 ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 6 கிலோ வெடிமருந்து மற்றும் 18 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum