தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2ஜி' ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.3,600 கோடி வருவாய்

Go down

2ஜி' ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.3,600 கோடி வருவாய் Empty 2ஜி' ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.3,600 கோடி வருவாய்

Post  meenu Tue Mar 12, 2013 12:38 pm

புதுடில்லி: நேற்று நடந்த, "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், மத்திய அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் கிடைக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. மும்பை, உ.பி., கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கான ஏலத்துக்கு, யாருமே விண்ணப்பிக்காதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கு, மறு ஏலம் நடத்தும்படியும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துக்கான சேவையை வழங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதில், அரசு எதிர்பார்த்த வருவாயை விட, மிக குறைவாக, 9,407 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.

அதேநேரத்தில், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்கும் ஏலத்துக்கான அடிப்படை விலை, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த ஏலத்தில், எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இதையடுத்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏல தொகையை விட, 50 சதவீதம் குறைவாக, ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான ஏலம், நடந்தது. ஏல தொகை கணிசமாக குறைக்கப்பட்டபோதும், ரஷ்யாவைச் சேர்ந்த, சிஸ்டெமா எஸ்.எஸ்.எஸ்.டி.எல்., நிறுவனம் மட்டுமே, ஏலத்தில் பங்கேற்றது. நான்கு மணி நேரம் நடந்த இந்த ஏலத்தில், சிஸ்டெமா நிறுவனம், எட்டு மண்டங்களுக்கு சேவை வழங்குவதற்கான ஏலத்தை எடுத்ததாகவும், இதன்மூலம், அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தொலை தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தவிர, வேறு எந்தவிதமான கூடுதல் கட்டணமும், அரசுக்கு கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், மும்பை, மகாராஷ்டிரா (மும்பை, மகாராஷ்டிரா மாநில தலைநகராக இருந்தாலும், தொலை தொடர்பு துறையை பொறுத்தவரை, மும்பையும், மகாராஷ்டிராவும், தனித் தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன) உ.பி.,யின் கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கு, சேவை வழங்குவதற்கு எந்த நிறுவனமுமே ஏலம் கேட்கவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்!
» முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» குஜராத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு: தணிக்கை துறை அறிக்கை
» சபரிமலை வருவாய் 39 நாட்களில் ரூ.95 கோடி
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum