தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: பாதிரியார் கைது

Go down

ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: பாதிரியார் கைது Empty ஊட்டியில் 9-ம் வகுப்பு மாணவியை முத்தமிட்டு சில்மிஷம்: பாதிரியார் கைது

Post  meenu Tue Mar 12, 2013 12:31 pm



பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார்.

கடந்த 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது. தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார்.

தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்.

மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார். தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.

போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர்.

ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி!
» இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
» 6ம் வகுப்பு மாணவியை மது குடிக்க வைத்து கற்பழித்த இந்திய ரிசர்வ் படை வீரர்!
» 10ம் வகுப்பு மாணவியை திருமணம் முடித்து உல்லாசத்திற்கு பின் ஏமாற்றிய டாக்டர்!
» மாணவிகளிடம் சில்மிஷம் செய்த இரு ஆசிரியர்கள் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum