தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுவை பாரதி பூங்காவில் பவர் ஸ்டாரின் 'நான் சரக்கு நீ ஊறுகா' படப்பிடிப்பு

Go down

புதுவை பாரதி பூங்காவில் பவர் ஸ்டாரின் 'நான் சரக்கு நீ ஊறுகா' படப்பிடிப்பு Empty புதுவை பாரதி பூங்காவில் பவர் ஸ்டாரின் 'நான் சரக்கு நீ ஊறுகா' படப்பிடிப்பு

Post  ishwarya Sat May 04, 2013 6:26 pm

கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட நடிகர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசன். இவர் ராம.நாராயணன் தயாரித்து இயக்கும் 'நான் சரக்கு நீ ஊறுகா' தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ருக்கு நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக புதுவையில் நடைபெற்று வருகிறது. இன்று புதுவையில் கவர்னர் மாளிகை முன்பு உள்ள பாரதி பூங்காவில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. டான்ஸ் குழுவினருடன் சேர்ந்து சீனிவாசன்-ருக்கு நடக்கும் காதல் டூயட் காட்சி படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். படப்பிடிப்பு இடை வேளையின்போது நடிகர் சீனிவாசனிடம் ரசிகர்கள் ஆட்டோ கிராப் வாங்கி மகிழ்ந்தனர். இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்தபடத்தில், நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா, கங்கை அமரன், விஷ்ணுபிரியன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum