தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவபெருமான் மகிமைகளை வைத்து பக்தி படம் இயக்குவேன் பிரபுதேவா

Go down

சிவபெருமான் மகிமைகளை வைத்து பக்தி படம் இயக்குவேன் பிரபுதேவா Empty சிவபெருமான் மகிமைகளை வைத்து பக்தி படம் இயக்குவேன் பிரபுதேவா

Post  ishwarya Sat May 04, 2013 6:08 pm

நடிகர் பிரபுதேவா நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை அதிகாரிகள் கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பிற்பகல் 2 மணியளவில் ராகு-கேது பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து மாலை மகன்யாசபூர்வ ருத்ராபிஷேகத்தில் பங்கேற்றார். பிறகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அம்பாளை வழிபட்டார். கோவில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அமர வைத்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபுதேவா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் சிவபெருமானின் தீவிர பக்தன், அதற்காக நான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய வந்தேன். ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் மன அமைதி கிடைக்கும்.

தெலுங்கில் நான் இயக்கி வரும் ராமய்யா வஸ்தா வைய்யா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் திரையிடப்படுகிறது. அந்த திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என சாமியிடம் வேண்டி கொண்டேன்.

இவ்வாறு நடிகர் பிரபுதேவா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum