தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெல்லி அணி அபாயகரமானது: சென்னை பயிற்சியாளர் கருத்து

Go down

டெல்லி அணி அபாயகரமானது: சென்னை பயிற்சியாளர் கருத்து Empty டெல்லி அணி அபாயகரமானது: சென்னை பயிற்சியாளர் கருத்து

Post  ishwarya Sat May 04, 2013 12:39 pm

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. 16-வது நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆண்டி பிக்சல் கூறியதாவது:-

ஷேவாக், வார்னர் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் டெல்லி அணியில் உள்ளனர். அந்த அணி அபாயகரமானது. எந்த நிலையிலும் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளார்கள். 5 ஆட்டத்தில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக கடினமாக போராடும். இதனால் அந்த அணியை வீழ்த்த சென்னை அணி போராட வேண்டும்.

டெல்லி டேர்டெவில்ஸ் (டிடி) என்றாலேயே டேஞ்சர்ஸ் டெல்லியாகும். புனே அணிக்கு எதிரான நாங்கள் சிறப்பாக ஆடாததால் தோற்றோம். இதனால் டெல்லி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி அணியுடன் நாளை மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெறுமா?
» இலங்கை ஒலிம்பிக் குழுவுக்கு பயிற்சியாளர் இல்லை'
» வீராங்கனைகளிடம் சில்மிஷம் செய்த பயிற்சியாளர் கைது! Pics
» சேவாக் நீக்கத்துக்கு தோ‌னியே காரணம் – பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும்: பயிற்சியாளர் நம்பிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum