தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனநல மருத்துவமனையில் பாலா பட சூட்டிங்!

Go down

மனநல மருத்துவமனையில் பாலா பட சூட்டிங்! Empty மனநல மருத்துவமனையில் பாலா பட சூட்டிங்!

Post  ishwarya Wed Apr 24, 2013 1:45 pm

டைரக்டர் பாலா இயக்கி வரும் புதிய படமான அவன் இவன் படத்தின் சூட்டிங் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நடந்து வருகிறது. சூப்பர் ஹிட் படமான சேதுவில் துவங்கி கடைசியாக வந்த நான் கடவுள் வரைக்கும் பாலாவின் படங்களில் ஒரு இருட்டு வாழ்க்கை இருக்கும்.

பாலா இயக்கிய படம் என்றாலே ஒரு சைக்கோ டைப்பான கதைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வான் ரசிகன். ஆனால் அவன் இவன் படம் பற்றி பாலா சொன்ன சில முன்னோட்டங்கள் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தின.

இது என் வழக்கமான படமாக இருக்காது. எல்லாரும் சிரிச்சுட்டு போற மாதிரி ஜாலியான ஒரு படத்தைதான் எடுக்கப் போறேன் என்று கூறியிருந்தார்.

இப்படத்தில் விஷால் பெண்மை சாயலுடன் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் திருட்டுத் தொழில் செய்யும் விஷாலும், ஆர்யாவும் பல இடங்களில் பல கெட்டப்பில் திருடுவதாகவும் அதில் ஒரு இடத்தில் திருடப் போகும் போதுதான் இப்படி அரவாணி கெட்டப்பில் விஷால் தோன்றுவார் என்று கூறுப்படுகிறது. இல்லையில்லை.

வரலாறு படத்தில் அஜீத் எப்படி பரநாட்டிய திருநங்கையாக தோன்றினாரோ, அப்படியிருக்கும் விஷாலின் கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது.

அதேநேரம் பாலா இந்த படம் தனது வழக்கமான படமாக இருக்காது என்று கூறியது சும்மா வெறும் வார்த்தைக்காகத்தானோ என்று யோசிக்க வைத்திருக்கிறது அவன்இவன் பற்றிய புதிய தகவல். ஆம். தனது படங்களில் எல்லாம் மனநல மருத்துவமனையையும், மனநலம் பாதிக்கப்பட்டவரையும் காட்டும் பாலா, அவன் இவன் பட சூட்டிங்கையும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தி வருகிறார்.

இதுனால் இதுவும் வழக்கமான பாலாவின் படமாகத்தான் இருக்கும் என்ற பேச்சு எழத்தொடங்கி விட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum