தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித் ரசிகர்களுக்கு புது எதிரி!

Go down

அஜித் ரசிகர்களுக்கு புது எதிரி! Empty அஜித் ரசிகர்களுக்கு புது எதிரி!

Post  ishwarya Sat Apr 20, 2013 5:33 pm

இளம் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜீத். அவரது ரசிகர்களுக்கு புதிதாக ஒரு எதிரி உருவாகியிருக்கிறார். அந்த புது எதிரியின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்திருக்கும் ரசிகர்கள் போஸ்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அஜீத்திற்கும், அவரது ரசிகர்கர் மன்றத்திற்கும் எழுந்திருக்கும் பிரச்சனை அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது போலிருக்கிறது. ரசிகர்கள் தன்னை சந்திக்க மறுப்பதை தொடர்கதையாக கொண்டு இருக்கிறார் அஜீத். இதனால் அவரது ரசிகர்கள் விரக்தியில் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலில் பிரவேசம் செய்வது உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார். இதனால் அப்செட்டான அவரது ரசிகர்கள் ‌இப்போது மேலும் விரக்தி அடைந்துள்ளனர்.

வருடத்திற்கு ஒரு நாளாவது எங்களை சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் துடிக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரையும் என்னிடம் அனுப்ப வேண்டார். நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவிடம் உத்தரவிட்டுள்ளார். ரசிகர்கள் ஒவ்‌வொரு முறை அஜீத்தை சந்திக்க வரும் போதோ அல்லது அவர்களின் கேள்விக்கோ சுரேஷ் சந்திரா‌வே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனை அஜீத்திற்கு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள், சென்னையில் கண்டன போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் “எங்கள் தலையை எங்ளோடு சந்திக்க விடாமல் தடுக்கும் சுரேஷ் சந்திராவை கண்டிக்கிறோம்” என்று அச்சிட்டுள்ளனர்.

ஏய்தவர்(அஜீத்) படப்பிடிப்பில் நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அம்பாகிய சுரேஷ் சந்திராவோ நொந்து நூடூல்ஸ் ஆகியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
» ஒரு லட்சம் பேர்.. நோ ப்ராப்ளம் ! – ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» கடவுளின் எதிரி
» எதிரி என்சைக்ளோபீடியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum