தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணவிரதம்

Go down

அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணவிரதம் Empty அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணவிரதம்

Post  ishwarya Tue Apr 16, 2013 6:09 pm

சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணவிரதப் போரட்டம் துவங்கியதிலிருந்து, அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகின்றன. அதில் சினிமா துறையும் அடக்கம். பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவருக்கு ஆதரவாக நாளை ஒரு நாள் மட்டம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

இப்போராட்டம் குறித்து தயாரிப்பாளர் கேயார் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது; “அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். அவருக்கு தமிழ் திரையுலகினர் அனைவரது ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் நாளை சினிமா தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இப்போராட்டம் நடைபெறும். திரையுலகைச் சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்காக படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

படப்பிடிப்பு இல்லாதவர்கள் நேரடியாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கலாம். படப்பிடிப்பு உள்ளவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கு இருந்தபடியே தங்களது ஆதரவை தெரிவிக்கலாம்,” என்றார்.

ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்பார்களா? என்று கேட்டதற்கு “உங்கள் மூலமாகத்தான் (பத்திரிகையாளர்கள்) அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தனியாக நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. திரையுலகை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum