தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு

Go down

பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு Empty பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு

Post  ishwarya Fri Apr 12, 2013 5:45 pm

நடிகை சோனா நேற்று போலீஸ் கூடுதல் கமிஷனரை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது எஸ்.பி.பி. சரண் மீது விளம்பரத்துக்காகவோ பணத்துக்காகவோ பாலியல் புகார் கூறவில்லை என்றார். தன்னிடம் எஸ்.பி.பி. சரண் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதை கமிஷனரிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. வீடியோ ஆதாரம் எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்ல சோனா மறுத்து விட்டார்.

இந்த நிலையில் சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ளது. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாளரிடம் கொடுத்து விடுவதாக சோனா கூறினார். ஆனால் இதுவரை வீடியோ ஆதாரத்தை அனுப்பி வைக்க வில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி சோனாவிடம் கருத்து கேட்க முயன்ற போது அவரது செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சோனா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமரச பேச்சு வார்த்தைகளை சோனா வீடியோவில் பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum