தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிப்பு – பூஜாவின் புது முடிவு

Go down

மீண்டும் நடிப்பு – பூஜாவின் புது முடிவு Empty மீண்டும் நடிப்பு – பூஜாவின் புது முடிவு

Post  ishwarya Thu Apr 11, 2013 4:38 pm

மார்க்கெட்டில் இருக்கும் போதே குட்பை சொல்லிவிட்டு கிளம்பியவர்தான் நடிகை பூஜா. இந்த இடத்தை நிரப்ப யார் யாரோ வருகிறார்கள். ஆனாலும் பூந்தொட்டியில்லாத வராண்டா போல வெறிச்சோடிதான் இருக்கிறது பூஜா இல்லாத தமிழ்சினிமா. நடிகைகளில் எளிமையானவர் என்பதால்தான் இத்தனை பில்டப்பும்.

பிறகு பெங்களூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்தில் வேலை பார்க்கிறார் என்று தகவல்கள் வந்தன. கை நிறைய சம்பளம் வாங்கிய ஒரு நடிகை எப்படி இப்படி மாத சம்பளத்திற்கு வேலை பார்க்க முடிகிறது என்றெல்லாம் விசும்பல் சப்தம் கேட்டது கோடம்பாக்கத்தில். ஆனால் முருங்கை மரத்தின் குணமே முறியறதுதான் என்கிற மாதிரி, மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் பூஜா.

சிங்களத்தில் தயாராகிறது இந்த படம். பழங்கால வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையாம். இளவரசன் சித்தார்த்தின் முந்தைய பிறப்புகள் பற்றி பேசப் போகிற இந்த படத்தில்தான் ராணியாக நடித்து வருகிறார் பூஜா. மிக அழகான காதல் கதையாக இதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏராளமான விருதுகளை பெற்ற இயக்குனர் சுனில் ஆரியரத்னே. படத்தின் பெயர் குசா-பாபா.

இப்படத்திற்கு பிறகு மீண்டும் தன் கலைவாழ்வை தொடங்குவாரா? இதுதான் பூஜாவின் முன் வைக்கப்படுகிற பெரும் கேள்வி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum