தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிவிட்டரில் ‘பவர் ஸ்டார்’ !

Go down

டிவிட்டரில் ‘பவர் ஸ்டார்’ ! Empty டிவிட்டரில் ‘பவர் ஸ்டார்’ !

Post  ishwarya Wed Apr 10, 2013 2:51 pm

இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க இயலாத ஒரு மனிதராக வலம் வருபவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.

இவர் நடித்து வெளிவந்த ‘லத்திகா’ திரைப்படத்தை 200 நாட்களை கடந்தும் சென்னையில் பவர் ஸ்டார் ரசிகர்களுக்காகவே திரையிட்டு வருகிறார்கள்.!

தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில்(?!) வெளியான ‘லத்திகா’வைத் தொடர்ந்து ‘ஆனந்த தொல்லை’, ‘மன்னவன்’, ‘திருமா’, ‘தேசிய நெடுஞ்சாலை’, ‘மூலக்கடை முருகன்’ என வரிசையாக என்று படங்களில் நடித்து வருகிறார்.

‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். ( அது நிஜமான ‘பவர் ஸ்டார்’ தானா அல்லது அவருடைய ‘பவரை’ குறைக்க நினைக்கும் விஷ(ய)மிகளின் வேலையா என்பது மில்லியனோ மில்லியன் டாலர் கேள்வி.)

நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ள இந்த ‘பவர் ஸ்டாரை’ ரசிகர்கள் வரவேற்று தனது விமர்சங்களை வாரி வழங்கி வருகின்றனர்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த ‘பவர்’.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் சில ‘பஞ்ச்’கள் மட்டும் இங்கே :

* உங்களை ‘நடிகர்’ என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு ‘பன்முக கலைஞன்’.

* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.

* ஆஸ்கார் விருது குழுக்களையும் உங்களது ‘லத்திகா’ படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா… உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார் ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum