தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு!

Go down

சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு! Empty சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு!

Post  ishwarya Tue Apr 09, 2013 6:11 pm

பிக்கி எனப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு, கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இரண்டு நாட்கள் நடக்கிறது. விழாவின் சிறப்பு அம்சமாக பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகமும் நடைபெற இருக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக பிக்கியின், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளி்தார்.

அப்போது அவர் கூறியதாது, சென்னையில் 2வது முறையாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு நடக்க இருக்கிறது. சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டிலில் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய தொழில் வர்த்தக துறையில் உள்ள குறைபாடுகளை நீக்க, மகாத்மா காந்தியின் முயற்சியால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மகாத்மாவின் தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன். மும்பையில் மட்டுமே நடந்து வந்த இந்த நிகழ்ச்சியை நானும், நண்பர் முராரியும் சேர்ந்து சென்னையில் நடத்த ஏற்பாடு செய்தோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில், வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள். பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகமும் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான்(கமல்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும். சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப்பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் திரைப்பட தொழில்துறை மாநாடு; கவர்னர் ரோசய்யா – கமலஹாசன் பங்கேற்பு
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» மதுரையில் நாளை விஜய் மக்கள் இயக்க மாநாடு… ரசிகர்கள் மூலம் ‘வேலாயுதம்’ பாடல் வெளியீடு!
» பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு
» புதிய அணி தலைமையில் ஃபெப்ஸியுடன் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum