தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் திரைப்பட தொழில்துறை மாநாடு; கவர்னர் ரோசய்யா – கமலஹாசன் பங்கேற்பு

Go down

சென்னையில் திரைப்பட தொழில்துறை மாநாடு; கவர்னர் ரோசய்யா – கமலஹாசன் பங்கேற்பு Empty சென்னையில் திரைப்பட தொழில்துறை மாநாடு; கவர்னர் ரோசய்யா – கமலஹாசன் பங்கேற்பு

Post  ishwarya Tue Apr 09, 2013 5:33 pm

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் 2 நாட்கள் நடக்கிறது. மாநாட்டின் தொடக்க விழா இன்று காலை நடந்தது. நடிகை திரிஷா குத்து விளக்கேற்றினார். பிக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ்குமார் வரவேற்று பேசினார்.

கவர்னர் ரோசய்யா விழாவில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது இந்திய திரையுலகில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச சினிமாவுக்கு நிகராக இந்திய திரையுலகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் மக்களுக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களையும் தயாரிக்க வேண்டும் என்றார்.

தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் நடிகர் கமலஹாசன் மாநாட்டில் பங்கேற்று பேசும் போது டிஜிட்டல் சினிமா வளர்ந்தால் அரசுக்கு வருமானம் பெருகும். திரையுலகம் டிஜிட்டல் சினிமா மாற்றத்துக்குள் வந்தே தீரும் என்றார். தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், டைரக்டர் பாலச்சந்தர், யு.டி.வி. சேர்மன் ரோனிஸ்குரு வாலா, சேம்பர் தலைவர் கல்யாண் பிக்கி அமைப்பின் தமிழக தலைவர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு!
» சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு!
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு
» சென்னையில் உலக திரைப்பட விழா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum