தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘விஸ்வரூபம்’ படத்தில் கதக் டான்ஸராக கமல்

Go down

‘விஸ்வரூபம்’ படத்தில் கதக் டான்ஸராக கமல் Empty ‘விஸ்வரூபம்’ படத்தில் கதக் டான்ஸராக கமல்

Post  ishwarya Tue Apr 09, 2013 1:34 pm

உலகநாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில்
கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆப்கன் தீவிரவாதியாக கமல் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பழைய
செய்தி. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இப்படத்தில் கதக் டான்ஸராக ஒரு
கெட்டப்பில் கமல் நடிக்கிறாராம்.
இதற்காக பிரிஜ்ஜூ மகராஜ் என்பவரிடம் முறையாக கதக் நடனம்
பயின்றிருகிறாராம். 50 கதக் நடன கலைஞர்களுடன் கமல் ஆடும் ஒரு பாடலும்
இப்படத்தில் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம்
முடிவடைந்து விட்ட நிலையில் 75 பேர் கொண்ட படக்குழுவினரோடு வரும் 14-ம்
தேதி அமெரிக்காவிற்கு பயணமாகிறார் கமலஹாசன்.



இது முடிந்ததும் அதே குழுவினரோடு ஒரு மாத படப்பிடிப்பிற்காக லண்டன்
செல்ல இருக்கிறாராம். ஆஸ்கர் விருதினை பெற்று தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’
படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய சங்கர் லதீஷ் ராய்
என்பவர் இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறாராம்.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் இங்கே உங்களுக்காக…

இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின் போது முதல் காட்சியை கிளாப்
அடித்து துவக்கி வைத்தார் பிரபல இயக்குனரான ஆர்.சி. சக்தி. இவரிடம்தான்
முதன் முதலாக கமலஹாசன் உதவி இயக்குனராக சேர்ந்தார் என்பது கூடுதல் தகவல்.

முதல் காட்சியை இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ஆவார்.

முதல் நாள் படப்பிடிப்பின் போது இரண்டாவது கிளாப் அடித்தவர் கமலின்
இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன். இவர் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி
வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum