தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு

Go down

 மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு  Empty மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு

Post  amma Fri Apr 05, 2013 5:12 pm



மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.9 லட்சம் கடன்

மதுரை, பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் கணேஷ்குமார். இவரிடம் கடந்த 3.11.2011 அன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவருடைய சொந்த தேவைகளுக்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கினாராம். அந்த பணத்தை ஒரு சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் திரும்ப தருவதாக கூறினார்.

இதனை நம்பிய கணேஷ்குமார் பணத்தை கொடுத்தார். ஆனால் சீனிவாசன் வட்டி, அசலை திரும்ப கொடுக்கவில்லை. பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் 3.1.2012 தேதியிட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து செக்கை கொடுத்தார். கணேஷ்குமார் அதை அவரது கணக்கில் செலுத்தியபோது, போதிய பணம் இருப்பில் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.

பிடி வாரண்டு

இதையடுத்து சீனிவாசனுக்கு எதிராக கணேஷ்குமார் மதுரை 2–வது விரைவு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலமுறை சீனிவாசன் ஆஜரகவில்லை.

இந்தநிலையில் விசாரணையை வருகிற 25–ந் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) வி.இருதயராணி, பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: மதுரை கோர்ட்டு உத்தரவு
»  செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
» செக்மோசடி வழக்கில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு பிடிவாரண்டு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum