தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம்

Go down

கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம் Empty கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம்

Post  ishwarya Fri Apr 05, 2013 1:41 pm

கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம் Ebcddb74-d4f8-461d-9f70-e6d38aa1326c_S_secvpf.gifரஜினி
கோச்சடையான் படத்தில் நடிக்கிறார். புராண காலத்தில் வாழ்ந்த சிவபக்த
மன்னனை பற்றிய கதை மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. கே.எஸ். ரவிக்குமார்
மேற்பார்வையில் ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக
தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி என
பெரும் நட்சத்திர பட்டாளம் இதில் நடிக்க உள்ளனர். கிராபிக்சில் நாகேசும்
நடிக்கிறார்.

இப்படத்தில் ரஜினி சொந்த குரலில் ஒரு பாடலை பாடுகிறார். ராஜராஜ சோழன்
படத்தில் சிவாஜி பாடும் ‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்’
என்ற பாட்டை போல் வசன நடையில் இப்பாடலை பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.
ரகுமான் ஸ்டூடியோவில் பாடல் பதிவு முடிந்துள்ளது. கவிஞர் வைரமுத்து
இப்பாடலை எழுதியுள்ளார்.

ஏற்கனவே மன்னன் படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடலை ரஜினி சொந்த
குரலில் பாடியுள்ளார். கோச்சடையான் படப்பிடிப்பு லண்டனில் மூன்று வாரங்கள்
நடக்கிறது. இதற்காக லண்டன் செல்ல இன்றும் நாளையும் ரஜினிக்கும் இதர
தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், விமானத்தில் டிக்கெட் முன் பதிவு
செய்யப்பட்டு உள்ளது.

அநேகமாக இன்று இரவு ரஜினி லண்டன் புறப்படுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத்
ஸ்டூடியோக்களில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» "கோச்சடையான்' படப்பிடிப்பு: 21-ல் ரஜினி லண்டன் பயணம்
» கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி ஹாங்காங் பயணம்
» கோச்சடையான் குழு மார்ச் 21-ல் லண்டன் பயணம்!
» வியாழக்கிழமை கோச்சடையான் பட பூஜை: ரஜினி, சினேகா நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு
» ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum