தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!

Go down

விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை! Empty விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!

Post  ishwarya Wed Apr 03, 2013 2:15 pm

ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதனை மறுத்து இருக்கிறார் ஷங்கர் உதவியாளர்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தற்போது ஷங்கர் இரண்டு மூன்று கதைகளில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இன்னும் எந்த கதை‌யை இயக்க போகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும், படத்தின் பெயர் தெர்டல் என்பதும் தவறான செய்தி என்று கூறியுள்ளார். விரைவில் தன் படத்திற்கான ஹீரோ-ஹீரோயின்களை ஷங்கரே அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum