தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்க் வேடத்திற்கு நான் தான் பொருத்தமான ஆளு…! நமீதா

Go down

சில்க் வேடத்திற்கு நான் தான் பொருத்தமான ஆளு…! நமீதா Empty சில்க் வேடத்திற்கு நான் தான் பொருத்தமான ஆளு…! நமீதா

Post  ishwarya Wed Apr 03, 2013 11:40 am

தமிழில் தி டிர்ட்டி பிக்சர்ஸ் படத்தை ரீ-மேக் செய்தால், அத‌ில் சில்க்காக நடிக்க நான் தயார், அதற்கு பொருத்தமான ஆளு நான் தான் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா. 1980-90களில் தென்னிந்தியாவில் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படம் வெளியாகி சக்கபோடு போட்டது. இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார்.

இந்தியில் இப்படம் சக்கபோடு போட்டதை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் இப்படத்தை ரீ-மேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக கன்னடத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல சர்சை மற்றும் கவர்ச்சி நடிகை வீணா மாலிக் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ-மேக் செய்யவும், அதில் சில்க்காக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர்கள் முடியாது என்று மறுத்துவிட்டநிலையில், இப்போது அந்த ரோலில் நடிக்க நான் தயார் என்று கூறியுள்ளார் நடிகை நமீதார்.

இதுகுறித்து நமீதா கூறியுள்ளதாவது, சில்க்கை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவரின் நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன். சில்க்கை போல எனக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவருடைய வேடத்திற்கு நான் பொருத்தமான ஆளு. தமிழ் மற்றும் தெலுங்கில் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இதற்காக சம்பளத்தை கூட நான் குறைத்து கொள்ள தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா
» நான் நலமாக இருக்கிறேன் – தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
» என்.டி.ஆருக்கு அடுத்து நான் தான்: சுமன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum