தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகளந்த பெருமாள் கோயில்

Go down

உலகளந்த பெருமாள் கோயில் Empty உலகளந்த பெருமாள் கோயில்

Post  meenu Mon Apr 01, 2013 2:07 pm


ஸ்தல வரலாறு....

மூலவர் - கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார் - கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் - கவுரி தீர்த்தம் பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் - திருக்கார்வானம் ஊர் - காஞ்சிபுரம் “கார்வானத்துள்ளாய் கள்வா” என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்காரகம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.

அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்புஷ்கல விமானம் எனப்படும். பார்வதி இத்தல இறைவனின் தரிசனம் பெற்றுள்ளார்.

இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

கோவில் நடை திறக்கும் நேரம் மாற்றம்......

இக்கோவிலில் நடை திறப்பது மற்றும் பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதிகாலை 5.45 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு மூலவர் விஸ்வரூப தரிசனம். 7.45 மணி முதல் 9.30 மணி வரை மூலவருக்கு திருவாராதனம், திருப்பாவை சாற்றுமறை நடந்து வருகிறது. இந்த நேரங்களில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும்.

காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். பின்னர் கோவில் அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும். மாலை 5.45 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு 7.15 மணி வரை நித்யானம் சந்தானம், சாற்றுமறை மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும்.

இரவு 8.30 மணிக்கு சாற்றுமறை முடிந்து கோவில் நடை அடைக்கப்படும். காலை 7.45 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5.45 மணி முதல் 7.15 வரையும் மூலவர் பெருமாள் சன்னதி பூஜைகளுக்காக அடைக்கப்பட்டிருக்கும். வைகானச ஆகம முறைப்படி, தென்னாச்சாரிய சம்பர்தாயத்தை பின்பற்றி இந்த நடைமுறையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தாயார் சன்னதி வழக்கம்போல் திறந்திருக்கும். இத்தகவலை முரளி சுவாமிகள் தெரிவித்தார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகளந்த பெருமாள் கோயில்
»  உலகளந்த பெருமாள் கோயில்
» உலகளந்த பெருமாள் கோயிலில் கருடசேவை
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» தேவநாதப் பெருமாள் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum