தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்

Go down

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் Empty ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்

Post  birundha Fri Mar 29, 2013 4:38 pm

தல வரலாறு....

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு வழிபட்டால் நிச்சயம் புத்திரபாக்கியம் உண்டாகும். அதன் பின்னனியில் உள்ள வரலாறு வருமாறு:- தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை-பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக தசரதர், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார்.

இதன் பின் அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக் கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். சிவனுக்கு "புத்திரகாமேட்டீஸ்வரர்'' என்ற பெயர் சூட்டினார். அந்த ஈசுவரர்தான் இத்தலத்தில் அருள் புரிகிறார். குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள்,ஏழு திங்கள் கிழமைகள் விரதமிருக்க வேண்டும்.

விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச் சாதமோ, கறி வகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 குழந்தைகள் என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று 6 குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.

ஏழாவது திங்களில் புத்திரகாமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை(கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.

நடைதிறக்கும் நேரம்:

காலை 7மணி முதல் நன்பகல் 11 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum