தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரித்திர படங்கள் குவிகிறது: அனுஷ்கா

Go down

சரித்திர படங்கள் குவிகிறது: அனுஷ்கா Empty சரித்திர படங்கள் குவிகிறது: அனுஷ்கா

Post  ishwarya Fri Mar 29, 2013 1:38 pm

‘அருந்ததி’ படம் அனுஷ்காவை முன்னணி நடிகையாக்கியது. அப்படம் சரித்திர கதையை பின்னணியாக கொண்டது. தற்போது தமிழ், தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ‘ராணி ருத்ரமா தேவி’ என்ற சரித்திர படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகிறது.

இந்நிலையில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

‘அருந்ததி’ படம் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தது. நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக அது இருந்தது. அப்படத்துக்கு பிறகு சரித்திர கதைகளில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளேன். ராணி ருத்ரமா தேவியை பற்றிய வரலாற்று கதையே இப்படம்.

சிறுவயதில் ராணி ருத்ரமாதேவியை பற்றி சரித்திர புத்தகத்தில் படித்துள்ளேன். அவர் கேரக்டரில் நடிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியில் குதிக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் ஆகும்.

‘அருந்ததி‘க்கு பிறகு என்னால் சரித்திரக் கதைகளில் நடிக்க முடியும் என்று இயக்குனர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையே இந்த படவாய்ப்பை பெற்று தந்துள்ளது. நான் இதுவரை நடித்துள்ள எல்லா படங்களுமே எனக்கு பிடித்தமானவை.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum