தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘முந்தானை முடிச்சு’ இரண்டாம் பாகம் தயாராகிறது

Go down

‘முந்தானை முடிச்சு’ இரண்டாம் பாகம் தயாராகிறது Empty ‘முந்தானை முடிச்சு’ இரண்டாம் பாகம் தயாராகிறது

Post  ishwarya Thu Mar 28, 2013 5:12 pm

நடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் வரும் முருங்கைக்காய் சமாச்சாரம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட்டாகின.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஜீவா கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.

இந்த படத்தை ‘டூ’ என்ற படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். அபிஷேக் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் வாலி, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். சி.ஆர்.மாறவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முந்தானை முடிச்சு பார்ட் டூ
» வடிவேலு – சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?
» முந்தானை முடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்கிறார் பாக்யராஜ்
» விஸ்வரூபம் ‘2-ம் பாகம்’ ‘மூ’ என்ற தலைப்பில் தயாராகிறது
» ‘மூன்றாம் பிறை’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது: கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum