தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

Go down

‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார் Empty ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

Post  ishwarya Wed Mar 27, 2013 5:26 pm

விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த ‘சமர்’ படம் ஜனவரியில் ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார்.
‘சமர்’ படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.

இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தியது. அப்போது விஷாலுக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும் பாக்கி இல்லை என்றும் தயாரிப்பாளர் ரமேஷ் விளக்கினார். அதற்கான தஸ்தா வேஜுகளையும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ‘சமர்’ பட பிரச்சினையில் தனக்கு உதவவில்லை என்று நடிகர் சங்கம் மீது விஷால் குற்றம் சாட்டினார். சமர் தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி தரவேண்டி உள்ளது என்றும் கூறினார். டைரக்டர் லிங்குசாமிக்கு நான் ரூ.2 கோடி கொடுக்க வேண்டி இருந்த போது நடிகர் சங்கம் மத்தியஸ்தம் செய்தது. அப்பணத்தை திருப்பி கொடுத்தேன்.

ஆனால் ‘சமர்’ தயாரிப்பாளரிடம் இருந்து சம்பள பாக்கியை என்னால் வாங்க முடியவில்லை என்றும் விஷால் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்’ பட தயாரிப்பாளர் டி.ரமேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன். ‘சமர்’ படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை அவர் வாங்கி விட்டார். கூடுதலாக மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பேசிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்கி உள்ளார். அவருக்கு பணம் கொடுத்ததற்கான தஸ்தா வேஜுகளை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன். ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை என் மேல் பொய் புகார் அளித்துள்ளார்.

‘சமர்’ படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு ரமேஷ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.
» கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!
» பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum