தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகமூடி கிளைமேக்ஸ் காட்சிகள்

Go down

முகமூடி கிளைமேக்ஸ் காட்சிகள் Empty முகமூடி கிளைமேக்ஸ் காட்சிகள்

Post  ishwarya Tue Mar 26, 2013 2:03 pm



இயக்குநர் மிஸ்கின் படைப்பில் உருவாகி வரும் முகமூடி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் காரைக்குடியில் 20 நாட்கள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜீவாவிற்கும், நரேனுக்கும் இடையே நடைபெறும் படுபயங்கர சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

முகமூடி படத்திற்கான பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. கிளைமேக்ஸ் காட்சிகளும், ஒரு சில பாடல்களும் மட்டும் படமாக்கப்பட உள்ளன. முழு படப்பிடிப்பும் முடிந்து இதரப் பணிகள் நடந்ததும் மே மாதம் முகமூடி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோடம்பாக்கம் வட்டாரம் சொல்கிறது.

ஹாலிவுட் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் வரிசையில் கோலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக முகமூடி இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பூஜா ஹெட்ஜே கதாநாயகியாக நடிக்க, கே இசையமைக்கிறார். இவர் யுத்தம் செய் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

முகமூடி படம் பற்றி தனது பிளாக்கில், இதுவரை முகமூடி படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 75% காட்சிகள் இரவில்தான் படம்பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று ஜீவா கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum