தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம்

Go down

திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம் Empty திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:52 pm

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்க இணையதளம், வெப் டி.வி. அறிமுக நிகழ்ச்சியில் (இடமிருந்து) இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், பாலாஜிசக்திவேல், அமீர், எஸ்.எஸ்.

சென்னை, ஏப்.17: தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்காக பிரத்யேகமான இணையதளம் மற்றும் வெப் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

இயக்குநர் சங்கத்துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை. அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!
» திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் பதவியிலிருந்து அமீர் ராஜிநாமா
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» நார்வே திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது – நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர்!
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum