தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரத்தின் சகோதரராக சந்தானம்

Go down

பரத்தின் சகோதரராக சந்தானம் Empty பரத்தின் சகோதரராக சந்தானம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:43 pm



பூ பட இயக்குநர் சசி தற்போது இயக்கி வரும் 555 படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கி இன்னும் முடிவடையாமல் உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, இப்படத்தில் கதாநாயகனான பரத்தின் சகோதரராக சந்தானம் நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. பரத்துக்கு ஜோடியாக சித்து பிளஸ் 2 பட நாயகி சாந்தினி நடிக்கிறார். மனோபாலா மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

படத்தின் முதல் பாதியில் வரும் பரத்தின் கதாப்பாத்திரம், இரண்டாம் பாதியில் முற்றிலும் மாறுபடுகிறது. எனவே கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப தனது உடல்வாகை மாற்றிக் கொள்ள பரத்துக்கு இரண்டரை மாத காலம் இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது என்று சசி குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum