தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம்

Go down

விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம் Empty விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம் திரைப்பட இசையின் பொற்காலம்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:42 pm

ஜெயா தொலைக்காட்சியின் 14-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திரை இசை ச

சென்னை, ஆக. 29: விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கும், திரைப்பட இசைக்கும் பொற்காலம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டினார்.

ஜெயா தொலைக்காட்சியின் 14-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், திரைப்பட இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே. ராமமூர்த்தி இணையை முதல்வர் பாராட்டி 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியும், இருவருக்கும் கார்களையும் வழங்கினார்.

மேலும், விஸ்வநாதனுக்கு திரை இசை சக்கரவர்த்தி விருது வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும்போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டறக் கலந்து இருக்கிறார்களோ அதேபோல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனே நான் வளர்ந்திருக்கிறேன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும் 1960-களிலும் இவர்கள் மெட்டிசைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம்பெற்றுள்ளன.

தொலைக்காட்சி, விடியோ, சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிக்கார்டர் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத காலத்தில் புகழின் உச்சத்தில் இவர்கள் இருந்தார்கள். இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றுள்ளன. குழந்தையாக இருந்தபோது என் மனதில் அப்படித்தான் இவர்களுடைய பாடல்கள் பதிந்து விட்டன. என் உயிர்மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள் என் மனதைவிட்டு அகலாது.

தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், வரலாற்றில் குப்தர்கள் காலத்தைதான் பொற்காலம் என்று சொல்வார்கள். அதேபோல், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கும், திரைப்பட இசைக்கும் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த காலக் கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் காரணமாக அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.

இப்படிப்பட்ட இவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். எனினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தை உடைய மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. நான் சொன்னால் இந்த விருதை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்றார் ஜெயலலிதா.

விழாவில், மூத்த திரைப்பட பாடகர்கள் டி.எம். செüந்திரராஜன், பி.பி. சீனிவாஸ், சுசீலா, ராகவன், எம்.எஸ். ராஜேஸ்வரி, எஸ்.பி. பாலசுப்பிரமணியன், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களையும் முதல்வர் வழங்கி பாராட்டினார்.

விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், இயக்குநர் கே.பாலசந்தர், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகியோர் பேசினர். எம்.எஸ். விஸ்வநாதன் ஏற்புரையாற்றினார். பத்திரிகையாளர் சோ ராமசாமி, சமக தலைவர் சரத்குமார் மற்றும் அமைச்சர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஜெயா தொலைக்காட்சியின் துணைத் தலைவர் கே.பி. சுனில் வரவேற்றார். தொடர்ந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த திரைப்படப் பாடல்கள் "நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் மெல்லிசை கச்சேரியாக நடைபெற்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» இசையின் தாக்குதல்
» அது ஒரு பொற்காலம்
» அது ஒரு பொற்காலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum