தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

Go down

பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது Empty பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

Post  ishwarya Mon Mar 25, 2013 1:18 pm



கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

குரோம்பேட்டை கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் வேலூரில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் ரூ. 10 கோடி கடன் ஏற்பாடு செய்துத் தர கோரியுள்ளார். இதற்கு ரூ. 65 லட்சத்தை கமிஷனாக பெற்றுக்கொண்ட சீனிவாசன், பல வாரங்கள் ஆகியும், கடன் பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது. மேலும், கமிஷன் பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

பணத்தை திருப்பிக் கேட்ட பாலசுப்பிரமணியத்தை பொம்மை துப்பாக்கியை காட்டி சீனிவாசன் மிரட்டினாராம். இது குறித்து பாலசுப்பிரமணியம் சில வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சீனிவாசனை போலீஸôர் தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனிவாசன், வெளிமாநிலங்களை சேர்ந்த இரண்டு பேரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். பவர்ஸ்டார் சீனிவாசன் "லத்திகா' என்ற படத்தில் நடித்தவர். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது உள்ளிட்ட ஓரிரு படங்களிலும் நடித்து வந்தார்.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
»  மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum