தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு - கேது பரிகார கோவில்கள்

Go down

ராகு - கேது பரிகார கோவில்கள் Empty ராகு - கேது பரிகார கோவில்கள்

Post  meenu Sun Mar 24, 2013 2:03 pm


ராகு - கேது பரிகார கோவில்கள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 17, 11:30 AM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
ராகு - கேது பரிகார கோவில்கள்
How to make flower from lamasa

கடன் தீர்க்கும் குபேர விநாயகர்.........

பொதுவாக கிழக்கு முகமாகத்தான் விநாயகர் காட்சி அளிப்பார். ஆனால், மதுரை அருகே 18 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனம் அடுத்த மடப்புரம் விலக்கு கேது பரிகார தலமான, விசாலாட்சி விநாயகர் கோவிலில் தெற்கு முகமாக திசைமாறி விநாயகர் காட்சி அளிக்கிறார். இவருக்கு 7 தேங்காய் மாலை சாற்றி, சங்கடகர சதுர்த்தியன்று 108 முறை வலம் வந்து, குபேரன் திசையான வடக்கு முகம் பார்த்து வழிபட்டால் குபேரன் அருள் பெற்று கடன் தொல்லை குறையும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

திருவாசி ஸ்ரீநடராஜர் ஆலயம்..........

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திருவாசி அமைந்துள்ளது. பொதுவாக நடராஜர் முயலகன் என்ற அசுரன் மீது நடனமாடுவதையே பார்த்திருப்பீர்கள். திருவாசியில் மட்டும் நாகத்தின் தலை மீது நடனமாடுகிறார். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் ராகு (அ) கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் பாம்பின் மீது நடனமாடும் நடராஜரை தரிசிக்க நற்பலன் கிட்டுகிறது.

சாலிக்கிராமம் - நாகாத்தம்மன் கோயில்..........

சென்னை தசரதபுரம் மெயின் ரோட்டில் நாகாத்தமன் கோயில் உள்ளது. இங்குள்ள நாகாத்தம்மன் பிரசித்தி பெற்றவள் ஆவாள். கோயில் எதிரில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் பூசி குங்குமமிட்டு வழிபட்டால் நாகதோஷத்தால் உண்டாகும் தீய பலன்கள் குறைந்து நற்பலன் பெறுவர்.

திருப்பாம்புரம்........

கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கொல்லு மாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் என்னும் திவ்யஸ்தலம். காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு பாம்பர நன்னகர்.

பாம்புரம், சேஷபுரி போன்ற பல பெயர்கள் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் பாம்பீசர், பாம்புரநாதர் என பல பெயர்கள் உண்டு. இறைவி பிரமராம்பிகை, வண்டார் குழலி எனவும் அழைக்கப்படுகிறார். ராகு, கேது ஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழ்பெரும்பள்ளம் ஆகிய ஸ்தலங்களின் பெருமையை ஒருசேர அமைந்தது இத்தலம்.

ராகு-கேதுவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ராகுவும், கேதுவும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றனர் என்பது ஸ்தல வரலாறு. காலசர்ப்ப தோஷம் ராகு- கேது தசை நடப்பில் உள்ளோர். களத்ரதோஷம், புத்ரதோஷம் உள்ளோர் இங்கு வந்து சாந்தி பரிகாரம் செய்து வருகின்றனர்.

திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்...........

60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகுதோஷம், காலசர்ப தோஷம், களத்ர தோஷம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். 60 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இப்படிக்கட்டில் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு உள்ளன.

இதனை சத்தியப் படிக்கட்டுகள் எனப்படுகின்றன. இந்த மலையில் ஏற மொத்தம் 1200 படிக்கட்டுகள் உள்ளன. 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலைக்கு எதிரில் நந்தி அமைந்துள்ளது. அர்த்தநாரீஸ்வரரை மூலவராகக் கொண்ட இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப் பெருமாள் அருளுகிறார்.

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயில்.........

கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தன். கேது மோட்சகாரகன் என்று பெயர். எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தனுக்கு யார் யார் மோட்சம் புகுவார்கள் என்கிற கணக்கு தெரியும். எனவே சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். இவருக்கு காஞ்சிபுரம் அருகே தனி ஆலயம் உள்ளது.

இங்கு சென்று கொள்ளு 200 கிராம், உளுந்து 200 கிராம், சித்திரவண்ணத் துணி ஒன்றரை மீட்டர் வைத்து அர்ச்சனை செய்து துணியை ஆலயத்திலேயே அர்ப்பணித்து விட்டு உளுந்தையும், கொள்ளையும் பால்தரக்கூடிய பசுவுக்கு கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் செய்வதால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

பரமகுடி சக்கரத்தாழ்வார்......

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். இங்கு அனுமார் புளியமரவடிவில் காட்சி தருகிறார். ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஐந்து தலை நாகர் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் விக்ரகம் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள்.

பாமணி ஸ்ரீநாகநாதர்........

மன்னார்க்குடிக்கு அருகில் பாம்பணி ஆற்றின் கரையில் உள்ள ஊர் பாமணி. பாம்பணி என்பதே பாமணி என்று மருவியதாக கூறுவர். இங்கு ஸ்ரீஅமிர்த நாயகி உடனுறை ஸ்ரீநாகநாதர் அருள் பாலிக்கிறார்கள். இங்குள்ள இறைவனின் திருமேனி மீது பாம்பு உருவங்கள் காணப்படுகின்றன. பிரளய காலத்தில் பல பாம்பினங்கள் இங்குள்ள இறைவனை வணங்கி பேறு பெற்றதாக கூறப்படுகிறது. இவரை வணங்கினால் உடலிலுள்ள ஹார்மோன் பிரச்சனைகள் குறையும், மன இறுக்கம் விலகி நிம்மதி கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum