தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல் பிரதியை ரசிகர் பெற்றுக்கொள்ள விஸ்வரூபம் பாடல் கேசட் வெளியீடு

Go down

முதல் பிரதியை ரசிகர் பெற்றுக்கொள்ள விஸ்வரூபம் பாடல் கேசட் வெளியீடு Empty முதல் பிரதியை ரசிகர் பெற்றுக்கொள்ள விஸ்வரூபம் பாடல் கேசட் வெளியீடு

Post  ishwarya Sat Mar 23, 2013 2:15 pm



கமல் ஹாசன் இயக்கி நடித்து தயாரித்து வரும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் மதுரையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டியின் முதல் பிரதியை கமல் ஹாசன் வெளியிட ரசிகர் பத்ரிநாத் பெற்றுக் கொண்டார். கமலஹாசன் ரசிகரான பத்ரிநாத், டென்னிஸ் விளையாட்டு வீரர்.

பின்னர் விழாவில் பேசிய கமல், தன்னுடைய படத்தின் பாடல்கள் இதுவரை வி.ஐ.பி மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்முறையாக தற்போதுதான் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

முன்பெல்லாம் சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வருவேன். பின்னர் பரமக்குடிக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். இப்போது நான் அங்கு ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம் என்றார் கமல் ஹாசன். முன்னதாக இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து இந்தப் படத்தில் தான் பாடியுள்ள பாடல் ஒன்றையும் மேடையில் பாடினார் கமலஹாசன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum