தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது

Go down

விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது Empty விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது

Post  ishwarya Sat Mar 23, 2013 1:51 pm



பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

வீடுகளுக்கு நேரடியாக ரிலீஸ் (டி.டி.எச். வசதி) செய்யப்படும் எந்த திரைப் படங்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து, வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் படத்தை வழக்கமான முறையில் திரையரங்குகளில் வெளியிடுவதுடன், டி.டி.எச். முறையில் வீடுகளுக்கே நேரடியாக ரிலீஸ் செய்யவும் நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் புதிய முறைக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், டி.டி.எச். முறையில் வெளியிடப்படும் விஸ்வரூபம் உள்பட எந்தத் திரைப்படத்துக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum