தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை

Go down

விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை Empty விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை

Post  ishwarya Sat Mar 23, 2013 1:07 pm



நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திர ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சந்திரஹாசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக கடந்த 2008-ம் ஆண்டு ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

ஆனால் திட்டமிட்டபடி ராஜ்கமல் நிறுவனம் மர்மயோகி படத்தை தயாரிக்காததால், எங்கள் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் என்ற படம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை தராத வரை விஸ்வரூபம் படத்தை வெளியிட ராஜ்கமல் நிறுவனத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வினோத் கே. சர்மா மனுவை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த மனு முற்றிலும் தவறான புரிதல்கள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நீதிபதி, மனுதாரர் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று

தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum