தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை

Go down

சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை Empty சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை

Post  meenu Tue Mar 19, 2013 4:58 pm

கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார்.

4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்:

சிவப்புக்கீரைக்கு வண்டல்மண் ஏற்றது. கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சாகுபடி செய்வார்கள்.
ஆனால் இவர் நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்து நல்ல விளைச்சல் பெற்றுள்ளார்.
20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றில் தலா 20 கிலோ அளவுக்கு பரப்ப வேண்டும்.
அதில் விதைகளைத் தூவி விதைத்து பூவாளியால் நீர் தெளித்து வரவேண்டும்.
விதைத்த 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.
4 சென்ட் நிலத்தை நன்றாக கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழு உரம், 1 கிலோ பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும்.
பிறகு 12 அடி நீளம், இரண்டரை அடி அகலத்திற்கு பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி வாய்க்கால் இருக்க வேண்டும்.
வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 7 அங்குலம் இடைவெளி விட்டு நாற்றுக்களை பாத்தியில் நடவு செய்ய வேண்டும்.
தண்ணீர் அவசியம் என்பதால் செழும்பாக தண்ணீர் கட்டவேண்டும்.
நடவு செய்த 7ம் நாள் 250 மில்லி மீன்அமிலக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மீன் கழுவிய தண்ணீரை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் சரிபங்கு தண்ணீரில் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 15ம் நாள் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது.
மகசூல் 10,000 கட்டு கீரை கிடைக்கும். கட்டு 6 ரூபாய்க்கு விற்பனையானாலும் செலவு போக ரூ.40,000 வருமானம் கிடைக்கும்.

தகவல்: பசுமை விகடன், 10.3.11, தொடர்புக்கு: சேவியர், 09789637500
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
»  என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
»  கடவுளின் ஆறு சிறப்பான பண்புகள்
» குழந்தைகளுக்கான சிறப்பான பெயர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum