தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற

Go down

எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற Empty எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற

Post  meenu Tue Mar 19, 2013 1:52 pm

எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால்,​​ ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம்.​ சித்திரைப் பட்டத்துக்கு டிஎம்வி-3,4 கோ-1,​ விஆர்ஐ-1 மற்றும் எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் ஏற்றவை.
அனைத்து ரகங்களும் ஒரு ஏக்கர் விதைப்புக்கு 2 கிலோ விதை போதும்.​ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும்
விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசியம்.
ஒரு கிலோ விதையுடன் டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாணத்தை 4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.​ விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.​ இதை 30 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம்.
பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்க நுண்ணுயிர் நேர்த்தி செய்யவேண்டும்.​ இதற்கு ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரிலம் ஒரு பாக்கெட் ​(200 கிராம்)​ பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை 500 மில்லி ஆடைநீக்கிய ஆறிய கஞ்சியுடன் கலந்து 2 கிலோ விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.​ இதை நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.​ இதை விதைப்பதற்கு 30 நிமிடம் முன் செய்ய ​ வேண்டும்.
மேலும் 20 கிலோ தொழு உரத்துடன் ஏக்கருக்கு 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 4 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் கலந்து கடைசி உழவின்போது தூவ வேண்டும்.
இறவை எள் பயிருக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும்.​ அல்லது துறை சிபாரிசுப்படி,​​ ஒரு ஏக்கருக்கு 14:9:9 கிலோ என்ற விகிதத்தில் தழை,​​ மணி,​​ சாம்பல் சத்துக்களை தரவல்ல யூரியா 30 கிலோ,​​ சூப்பர் பாஸ்பேட் 55 கிலோ,​​ பொட்டாஷ் 15 கிலோ அளவில் உரமிட வேண்டும்.
அúஸôஸ்பைரிலம் 4 பாக்கெட் கலந்தால் யூரியா 27 கிலோ போதும்.​ மாங்கனீஸ் சல்பேட் நுண்ணூட்டச்சத்து 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தபின் வயலில் தூவவேண்டும்.
எள் பயிரில் பயிர் கலைத்தல் செய்யாவிட்டால் மகசூல் பாதிக்கும்.​ பயிர் கலைப்பு செய்திட விதைத்த 15-வது நாளில் செடிக்குச் செடி 15 செ.மீ.​ இடைவெளி இருக்கும்படியும்,​​ 30-வது நாளில் செடிக்குச் செடி 30 செ.மீ.​ இடைவெளி உள்ளவாறும் வைத்து,​​ மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும்.​ செடிகளைக் கலைத்து விடும்போது வயலில் போதிய அளவு ஈரம் இருப்பது நல்லது.

சித்திரைப் பட்டத்தில் மேற்படி சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்
» நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» நல்ல நல்ல நீதிக் கதைகள்
» எள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum