தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மானத்தை வாங்கிய இந்திய ஹாக்கி அணி!

Go down

மானத்தை வாங்கிய இந்திய ஹாக்கி அணி! Empty மானத்தை வாங்கிய இந்திய ஹாக்கி அணி!

Post  meenu Sun Mar 17, 2013 1:34 pm



0


லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் ஆடவர் பிரிவில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் 2- 3 என்ற கோல் கணக்கில் தோற்று பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.

தொடர்ந்து தோல்விகளாகவே சந்தித்து வந்த இந்திய அணி கடைசி போட்டியிலாவது வெற்றிபெற்று புள்ளிகளைப் பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியே கிடைத்தது.

ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்தில் ஆன்ட்ரூ குரோனியே முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

13வது நிமிடத்தில் சந்தீப் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். பிறகு 34வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா டிமதி டிரம்மன்ட் மூலம் ஒரு கோல் அடித்து 2- 1 என்று முன்னிலை பெற்றது.

65வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் நாரிஸ் ஜோன்ஸ் ரிவர்ஸ் பிளிக்கில் ஒரு கோல் போட்டு எண்ணிக்கையை 3ஆக உயர்ந்தது.

கடைசியாக 67வது நிமிடத்தில் ஷிவேந்திரா அளித்த பாஸ் மூலம் தரம்வீர் ஆறுதல் கோலை அடித்தார்.

மொத்தத்தில் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி அணி பெரும் அவமானத்தைச் சந்தித்துத் திரும்பியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum