ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
Page 1 of 1
ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது.
புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 3-1 என்கிற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் பெனால்டி காரனர் முறையில் இந்தியாவில் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு ஆட்டம் முழுவதும் இந்தியாவுக்கு இறங்குமுகமாகவே இருந்தது.
நியூசிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஹாவார்ட் 13 ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் சம நிலையை அடைந்தன.
பின்னர் நியூசிலாந்து தொடர்ச்சியாக இரண்டு கோல்களை அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் 3-1 என்கிற நிலையில் பின்தங்கியிருந்த இந்திய அணி அதிலிருந்து மீளவேயில்லை.
இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் ஆட்டத்தில், இந்தியா நெதர்லாந்து அணியிடம் 2-3 என்கிற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
தற்போது குரூப் பி பிரிவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் நெதர்லாந்தும் இரண்டாம் இடத்தில் தென்கொரியாவும் உள்ளன.
தொடர்ச்சியாக இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு அடுத்து என்ன என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிக்கும் சங்கங்கள் தொடர்ந்து இரண்டு அமைப்பாக இருக்கின்றது என்பது, அவற்றை ஒருங்கிணைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் குறிப்படத்தகுந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹாக்கி:இந்தியாவுக்கு 2 ஆவது தோல்வி
» ஒலிம்பிக் ஹாக்கி: பாகிஸ்தான் படுதோல்வி
» மானத்தை வாங்கிய இந்திய ஹாக்கி அணி!
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» அஸ்லன் ஷா ஹாக்கி: பாகிஸ்தானுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum