தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)

Go down

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்) Empty உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)

Post  meenu Sun Mar 17, 2013 1:17 pm


0


உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மகளிர் அணி முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது.

பிரான்சில் உள்ள நிமெஸ் நகரில், மகளிர் அணிகளுக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருறது.

இதில் இந்தியா உள்ளிட்ட 26 அணிகள் பங்கேற்கின்றன. ஜி பிரிவில் அயர்லாந்து, அர்ஜென்டினாவை வென்ற இந்திய அணி, காலிறுதிக்கு முந்தைய ரவுண்டு-16 சுற்றில், தரவரிசையில் 8வது இடத்திலுள்ள நெதர்லாந்தை சந்தித்தது.

இதன் முதல் போட்டியில் அனகா அலன்காமணி 11-8, 11-6, 11-5 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் வான் டெர்ரை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் தீபிகா பல்லீகல் 8-11, 4-11, 3-11 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்தார்.

அணியின் வெற்றியை முடிவு செய்யும் கடைசி போட்டியில் அசத்திய ஜோஸ்னா சின்னப்பா, 5-11, 11-9, 8-11, 11-2, 11-3 என ஆர்லாவை வென்றார்.

முடிவில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முதன் முறையாக முன்னேறி வரலாறு படைத்தது.

இதற்கு முன்பு 2002, 2010 என்று இரு முறை இத்தொடரில் பங்கேற்ற இந்திய அணி 18, 10வது இடம் தான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
» குறையிருந்தும் சாதனை படைத்த 5 பிரபலமான மனிதர்கள்!!!
» சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...!
» 15 வயது வீராங்கனை ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை! (படங்கள்)
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum