தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை

Go down

'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை Empty 'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை

Post  ishwarya Sat Mar 16, 2013 6:12 pm

கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதால் தியேட்டர்களில் திரையிட அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 25-ந் தேதி திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை.

தடையை நீக்க கோரி கமல் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி வெங்கட்ராமன் வழக்கை விசாரித்தார். படத்தை பார்த்த பிறகு தீர்ப்பு அளிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் 'விஸ்வரூபம்' படம் அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. வக்கீல்களுடன் உட்கார்ந்து படத்தை பார்த்தார். இதையடுத்து சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு படத்தை திரையிட அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பொதுமக்கள் சிலரை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொல்வதுபோல் சீன்கள் உள்ளன. அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் காட்டப்படுகிறது. குரான் காட்சி நீக்கப்படலாம் என்றும் பேச்சு அடிப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் 'விஸ்வரூபம்' பட வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் வக்கீல்கள், 'விஸ்வரூபம்' படக்குழுவினர் மற்றும் கமல் ரசிகர்கள் ஏராளமானோர் கோர்ட்டில் திரண்டு நின்றனர். பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள், டி.வி. கேமராமேன்களும் கூடினார்கள். ஐகோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. கோர்ட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சென்னை கோட்டை மற்றும் அரசு அலுவலகங்கள், பாலங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். விசாரணை துவங்கியதும் 'விஸ்வரூபம்' படத்தை தயாரித்த ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் வக்கீல்கள் சதீஷ் பராசரண், பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜரானார்கள்.

'விஸ்வரூபம்' படத்துக்கு 144 தடை பிறப்பித்த சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவுகளை எதிர்த்து தனியாக முறையீடு செய்ய உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி வெங்கட்ராமன், நடிகர் கமலஹாசனுக்கு சில அறிவுரைகளை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

கமலஹாசன் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி சுமூக தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த படத்தின் முதலீட்டை கவனத்தில் கொண்டாலும் இவ்விவகாரத்தில் தேசத்தின் ஒற்றுமை, மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கவனத்தில் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

விசாரணை முடிந்ததும் கமலஹாசனின் வக்கீல் பி.எஸ்.ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீதிபதி சில யோசனைகள் கூறியுள்ளார். எங்களையும் அரசு மற்றும் படத்தை எதிர்ப்பவர்கள் ஆகிய முத்தரப்பினரும் கலந்து பேசி சமூக தீர்வுக்கு வரும்படி அறிவுறுத்தி உள்ளார். கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனரின் 144 தடை உத்தரவுகளை எதிர்த்து மனுதாக்கல் செய்ய உள்ளோம். அதை நீதிபதி விசாரிக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து முறையீடு செய்வீர்களா என்று கேட்டபோது, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார். கோர்ட்டு அறிவுரைப்படி கமலஹாசன் இன்று மாலை அரசு அதிகாரிகளையும், முஸ்லிம் இயக்கத்தினரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு
» விஸ்வரூபம் பிரச்சினை: தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் - பாரதிராஜா ஆவேசம்
» விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» 'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு
» விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum