தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிக்னல்களில் ரசிகர்கள் தொந்தரவு: நடிகர்களின் கார்களுக்கு கறுப்பு கண்ணாடி அவசியம்- விவேக் பேட்டி

Go down

சிக்னல்களில் ரசிகர்கள் தொந்தரவு: நடிகர்களின் கார்களுக்கு கறுப்பு கண்ணாடி அவசியம்- விவேக் பேட்டி Empty சிக்னல்களில் ரசிகர்கள் தொந்தரவு: நடிகர்களின் கார்களுக்கு கறுப்பு கண்ணாடி அவசியம்- விவேக் பேட்டி

Post  ishwarya Sat Mar 16, 2013 5:55 pm


சிக்னல்களில் ரசிகர்கள் தொந்தரவை தவிர்க்க கறுப்பு கண்ணாடி அவசியம் என்று விவேக் கூறினார். கறுப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் சட்ட விரோத செயல்கள் நடப்பதால் நாடு முழுவதும் கார்களில் கறுப்பு கண்ணாடிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சமீபத்தில் டெல்லி மாணவி பஸ்சில் கற்பழிக்கப்பட்ட போது கறுப்பு கண்ணாடியால் உள்ளே நடப்பது வெளியே தெரியவில்லை. இதனால் கார் கண்ணாடிகள் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு பிலிம்களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு பிலிம்களை போக்கு வரத்து போலீசார் அகற்றி வருகிறார்கள். கறுப்பு பிலிம் அகற்றாதவர்களுக்கு முதல் எச்சரிக்கையாக ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் விவேக்கின் காரில் கறுப்பு பிலிம் அகற்றப்படாததால் அவருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்தனர். போலீசார் அவரது காரை நிறுத்தியதும் கார் கண்ணாடியை இறக்கிய விவேக் தன்னை போலீசாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகும் போலீசார் காரை அனுமதிக்க வில்லை. அவருக்கு கறுப்பு பிலிம் அகற்றாததற்கு போலீசார் ரூ.100 அபராதம் விதித்தனர்.

இது பற்றி நடிகர் விவேக் நிருபரிடம் கூறியதாவது:-

என்னைப் போன்ற பிரபலங்களுக்கு கார்களில் கறுப்பு பிலிம் அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அந்த கடிதத்தின் நகலை போலீசாரிடம் காட்டி னேன். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்றார்கள். செலுத்தியதும் எனது காரை அனுமதித்தனர். போலீசார் நடு ரோட்டில் என்னை நிறுத்தி வைத்திருந்ததால் அசவுகரியம் ஏற்பட்டது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் சிக்னலில் நின்று இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

என்னைப் போன்ற நடிகர்-நடிகைகளின் கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிமை அகற்றினால் இது போன்ற சிக்னல்களில் நிற்கும் போது கூட்டம் கூடும். மக்கள் எங்களிடம் கை குலுக்கவும், ஆட்டோ கிராப் வாங்கவும் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் நாங்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கிறோம். இதே போல் முன்னணி நடிகையின் கார் சிக்னலில் நிற்கிறது என்றால் நிலைமை மோசமாகி விடும். எனவே எங்களைப் போன்றவர்களுக்கு கறுப்பு பிலிம் அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகரிடம் கேட்ட போது, `விவேக் நடிப்பு எனக்கு பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் அவருக்கு உதவ முடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற கட்டாயத்தில் உள்ளோம். இதனால் அவருக்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum