தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார்

Go down

கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார் Empty கமலஹாசன் ஏற்பாடு: ரஜினிகாந்த், வீட்டில் விஸ்வரூபம் படம் பார்த்தார்

Post  ishwarya Sat Mar 16, 2013 4:43 pm

கமலின் ‘விஸ்வரூபம்’ படம் இன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசானது. ரஜினிகாந்த் நேற்று மாலை படம் பார்த்தார். கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே படத்தை அவர் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தார். குடும்பத்தினருடன் உட்கார்ந்து படத்தை ரஜினி பார்த்தார்.

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்ட போது ரஜினிதான் முதன் முதலில் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கமல் மகா கலைஞன் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தி படம் எடுக்க மாட்டார். எனவே இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் மனம் உடைந்து பேட்டி அளித்த போதும் போனில் பேசி ஆறுதல் கூறினார். எனவே தான் வீட்டிலேயே ரஜினியை படம் பார்க்க வைத்தார். நடிகர், நடிகைகள் பலர் விஸ்வரூபம் படத்தை பார்க்க ஆர்வப்பட்டனர். அவர்களுக்கு நேற்று இரவு சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு கமல் ஏற்பாடு செய்தார்.

வாசலிலேயே நின்று படம் பார்க்க வந்தவர்களை வரவேற்கவும் செய்தார். நடிகர்கள் பிரபு, ஜெயராம், விவேக், சேரன், நடிகைகள் சுகாசினி, குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பலர் படம் பார்த்தனர். ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரே 3டி’ ஒலி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது. இந்த ஒலி தொழில் நுட்ப வசதி சத்யம் சிக்ஸ் டிகிரி தியேட்டரில் உள்ளது. அந்த தியேட்டரில் தான் நடிகர் நடிகைகள் படத்தை பார்த்தனர்.

டி.டி.எச்.களில் வருகிற 15-ந்தேதி விஸ்வரூபம் படம் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதற்காக டி.டி.எச். நிர்வாகத்தினருடன் கமல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோச்சடையான் படம் பார்த்தார் ரஜினிகாந்த்
» விஸ்வரூபம் படம் பார்த்தால் ஒலி வெள்ளத்தில் மூழ்கிய உணர்வு கிடைக்கும்: கமலஹாசன் பேச்சு
» விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூருக்கு செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை: கமல் ரசிகர் விசேஷ ஏற்பாடு
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு
» இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum