தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அடையாற்றில் குதித்து தற்கொலை

Go down

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அடையாற்றில் குதித்து தற்கொலை  Empty நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அடையாற்றில் குதித்து தற்கொலை

Post  ishwarya Thu Mar 14, 2013 2:54 pm

பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், கோட்டூர்புரம் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம் மாளின் பேத்தி நித்யஸ்ரீ. கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர். இவரும் கர்நாடக இசையை கற்று, பல்வேறு மேடைகளில் கச்சேரி நடத்தி வருகிறார்.

ஐஸ்வர்யாராய் நடித்த ஜீன்ஸ் படத்தில் ''கண்ணோடு காண்பெதெல்லாம் தலைவா... கண்களுக்கு சொந்தம் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் ''மின்சார கண்ணா'' போன்ற திரைப்பட பாடல்கள் மூலமும் பெரும் புகழ் அடைந்தவர் நித்யஸ்ரீ. நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். பல்வேறு நாடுகளிலும் இசை கச்சேரி நடத்தியுள்ளார்.

இவரது கணவர் மகாதேவன் (45). மந்தைவெளியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தேஜாஸ்ரீ (10), தனுஜா ஸ்ரீ (Cool என்ற மகள்கள் உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கூட்டு குடும்பமாக வசித்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தி அடைந்த மகாதேவன், மாமியார் வீட்டுக்கு செல்வதாக கூறி மதியம் 12.50 மணிக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

வழியில் கார் பேட்டரியை மாற்றி விட்டு தானே காரை ஓட்டினார். அருகில் டிரைவர் சுரேஷ் இருந்தார். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வழியில் கோட்டூர்புரம் அடையாறு பாலம் வந்ததும் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிய மகாதேவன் திடீரென அடையாறு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துவிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நித்யஸ்ரீக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பாலத்தின் தொடக்கத்தில் இருந்து குதித்ததால், குறைந்த அளவே தண்ணீர் இருந்தது.

ஆனால் சேறு அதிகமாக இருந்துள்ளது. அதில் மூழ்கியதால் மகாதேவன் அங்கேயே இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. தீயணைப்பு படை வீரர்கள் வந்து அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைதொடர்ந்து அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு இரவில் மகாதேவன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாதேவன் தற்கொலை குறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் புகழேந்தி மேற்பார்வையில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன...

இசை குடும்பத்தில் பிறந்த நித்யஸ்ரீக்கும் மகாதேவனுக்கும் பெரியோர் நிச்சயித்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆன சில வருடங்கள் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால், பல கோயில்களுக்கு தம்பதிகள் பிள்ளை வரம் வேண்டி சென்றனர். அதன்பின் 2 மகள்கள் பிறந்தனர். நித்யஸ்ரீ மேடை கச்சேரி நடத்துவது மகாதேவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதனால், அதை குறைத்து கொள்ளும்படி மனைவியிடம் மகாதேவன் கூறியதாக தெரிகிறது. அதை நித்யஸ்ரீ ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தம்பதிகளுக்கு இடையே லேசான கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளும் தலைதூக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில், மகாதேவனின் தாயார் கடந்த ஏப்ரல் 23ம் தேதி மரணம் அடைந்தார். தாயார் மீது மகாதேவன் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டது.

இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பணிக்கும் சரியாக செல்வது இல்லை.
இந்நிலையில், கடந்த 2 நாளாக கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை இருவரும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதை நினைத்து மகாதேவன் கலங்கினார். நேற்று காலை காரில் மாமியார் வீட்டுக்கு புறப்பட்டவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை பாயின்ட்

கோட்டூர்புரம் அடையாறு ஆற்றில் மாதம் ஒருவராவது குதித்து தற்கொலை செய்து விடுகின்றனர். இதை தடுக்க அங்கு தினம் ஒரு காவலரை பணிக்கு நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலைமோதிய கூட்டம்

நித்யஸ்ரீ கணவர் மகாதேவன் தற்கொலை செய்த தகவல் பரவவே அவரது வீட்டுக்கு இசை ரசிகர்கள் படையெடுத்தனர். கூட்டம் அலைமோதியது. அவர்கள் கதறி அழுதனர். பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் அங்கு திரண்டதால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத்தினர் கதறல்

மகாதேவன் உடல் மாலை 4.45க்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 6 மணி வரை உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை பெறுவதற்காக மகாதேவனின் தந்தை விஸ்வநாதன். சகோதரர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் டாக்டர் சுந்தரராமன், டாக்டர் அஜய் ஆகியோர் வந்திருந்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

9 நிகழ்ச்சிகள் ரத்து

மார்கழி இசை சீசனில் நித்யஸ்ரீயின் கச்சேரி அதிக அளவு இருக்கும். இந்த முறை 10 நிகழ்ச்சிகள் இருந்தன. ஒரு நிகழ்ச்சியை முடித்துள்ளார். மீதமுள்ள 9 நிகழ்ச்சிகள் பாக்கி உள்ளது. அந்த கச்சேரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி

அடையாறு ஆற்றில் மகாதேவன் குதித்தது பற்றி டிரைவர் சுரேஷ் உடனடியாக நித்யஸ்ரீக்கு போனில் தகவல் கொடுத்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆட்டோவில் அங்கு வந்தார். நெரிசல் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக சென்ற பைக் ஒன்றில் ஏறி ஆற்றுக்கு வந்தார். கணவர் குதித்த இடத்தில் நின்று கதறினார். தானும் ஆற்றில் குதிக்க முயற்சி செய்தார். அங்கு விரைந்துவந்த அவரது உறவினர்கள் நித்யஸ்ரீயை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு கதறியபடி இருந்த அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதையும் உறவினர்கள் தடுத்துவிட்டனர். இதற்கிடையில் மகன் தற்கொலை செய்தது அறிந்த அவரது தந்தை மயங்கி விழுந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல பாடகர் நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை
» பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை: நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்
»  மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum