தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!

Go down

ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு! Empty ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!

Post  meenu Wed Mar 13, 2013 5:35 pm

மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலைக்கு முன் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் மாலை 2.30 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் குறித்த மாணவி மடு சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இக்கடத்தல் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பரீட்சை முடிவடைந்த நிலையில் மதியம் வீடு செல்ல பாடசாலையை விட்டு வெளியில் வந்துள்ளார்.

இதன் போது மதியம் 1.15 மணியளவில் புத்தம் புதிய சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் அவ்விடத்திற்கு வந்த 4 சந்தேக நபர்கள் குறித்த மாணவியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.

இதன் போது அப்பாடசாலை மாணவிகள் சிலர் அதனை கண்டு உரிய தரப்பினரிடம் முறையிட்டு குறித்த மாணவியின் பெற்றோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆனால் முச்சக்கர வண்டியில் எவ்வித நம்பர் தகடுகளும் காணப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இவ்விடயம் தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கியதோடு மன்னார் பொலிஸார் துரித தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி முதலில் முச்சக்கர வண்டியில் மன்னார் எழுத்தூர் பகுதியை நோக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
பின் மாணவியை அச்சுறுத்திய பின் குறித்த மாணவியின் சீருடையை மாற்றுவதற்காக குறித்த முச்சக்கர வண்டியின் வீடு அமைந்துள்ள சௌத்பார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின் அவர்கள் வாங்கிக்கொடுத்த ஆடையை அணிந்த குறித்த மாணவி பேரூந்து ஒன்றின் மூலம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின் மடு வீதியில் இறங்கி மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் இவர்களிடம் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவி தலைமுடிக்கு கட்டியிருந்த ‘ரிபன்’ ஒன்றின் மூலம் இவர் கடத்தப்பட்ட மாணவி என பொலிஸார் அறிந்து கொண்டனர்.
இந்த நிலையில் பொலிஸார் உடன் குறித்த மாணவியை மீட்டதோடு குறித்த இளைஞரை கைது செய்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட விசாரனைகளின் போது மாணவியை கடத்துவதற்காக பயண்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி உற்பட மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்துடன் ஈடுபட்ட 4 பேரூம் மன்னார் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த மாணவியிடமும் குறித்த இளைஞர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் மூலம் ஒரு தலைக்காதலினால் ஏற்பட்ட கடத்தல் சம்பவம் என தெரிய வந்துள்ளது.

மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஒருவர் கடந்த 3 மாதங்களாக குறித்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதன் போது குறித்த மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவியை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையிலேய குறித்த சம்பவம் இடம் பெறறுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த 4 இளைஞர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குறித்த மாணவி உடற்பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தலுக்காக பயண்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி எவ்வித நம்பர் தகடுகள் மற்றும் பதிவுகளும் இல்லாத நிலையில் மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதியப்பட்டு அதன் தலைவரின் ஆதரவுடன் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

குறித்த முச்சக்கர வண்டி போன்று மேலும் சில முச்சக்கர வண்டிகள் எவ்வித இலக்கங்களும் இன்றி அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!
» தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட விவகாரம்: சாத்தூர் ராமச்சந்திரன் சரண் அடைய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
» பற்றைக்குள் இளம் மாணவியின் சீருடை மீட்பு! நீடிக்கும் மர்மம்!
» 15 நிமிடங்களில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு மீட்பு: வவுனியாவில் சம்பவம்!
» அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum