தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்

Go down

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம் Empty பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்

Post  ishwarya Mon Mar 11, 2013 1:13 pm


தேவர்மகன் பார்த்த போது சிவாஜிக்கு இணையாக தெரிந்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன். இளைய தலைமுறை அந்தப் படத்தில்தான் காகா ராதாகிருஷ்ணனின் நடிப்பை ஓரளவு தெரிந்து கொண்டது. சிவாஜியை மிகை நடிப்பு என்று விமர்சித்தவர்கள் காகா ராதாகிருஷ்ணனைதான் அவருக்கு பதிலாக முன் வைத்தனர். காகாவும் நாடகத்திலிருந்து வந்தவர்தான். ஆனால் அவரிடம் மிகை நடிப்பு இல்லை.

தமிழின் பழம்பெரும் நடிகர் என்ற பதத்துக்கு உதாரணமாக இருந்த காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். காலம் அவரது உடல்நிலையை மோசமாக மாற்றியிருந்தது. கடந்த பல மாதங்களாக மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். பலமுறை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள நேர்ந்தது. இனி பரவாயில்லை என்று வீட்டிற்கு வந்த பிறகு திடீரென நேற்று அந்த துயரச்சம்பவம் நடந்தது.

என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் கம்பெனியில் காகா ராதாகிருஷ்ணன் நடித்து வந்தார். ஆறாவது வயதிலேயே மேடை ஏறியவர். அறுபது வயதுக்குப் பிறகும் நடிப்புத் தொடர்ந்தது. மங்கையர்க்கரசி படத்தின் மூலம் திரைக்கு வந்தார்.

அறுநூறுக்கும் மேல் திரைப்படங்கள் இரு மனைவிகள் அரை டஜனுக்கும் மேல் பிள்ளைகள் பதினாறு பேரக்குழந்தைகள் என்று பெரிய ஆலமரமாகதான் இருந்தார் காகா. விருதுகள், அங்கீகாரம் என்ற விழுதுகள்தான் குறைவு. அவர் படங்களைப் பார்க்கும் போது, அவரது நடிப்பை ரசிக்கும் போது இப்படியொரு நடிகன் இல்லையே என்ற ஏக்கத்தை அவர் நம்முள் ஏற்படுத்துவார். காகா ராதாகிருஷ்ணன் என்ற கலைஞனின் திறமை அந்த நேரங்களில் மீண்டும் நினைவுகூரப்படும், மீண்டும்.. மீண்டும்.

அவரது உடல் பொதுமக்கள், கலைஞர்கள் அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கண்ணம்மாபேட்டையில் உடல் தகனம்.

அந்த திறமையான கலைஞனுக்கு நமது நெஞ்சார்ந்த அஞ்சலி.
பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum