தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டு வந்த மீட்பர்

Go down

 மீண்டு வந்த மீட்பர்  Empty மீண்டு வந்த மீட்பர்

Post  meenu Sat Mar 09, 2013 1:11 pm

இயேசு நம்மைக் காண்கிறார். அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம்தான் நிலையான மகிழ்ச்சிக்கு அடிப்படை. இயேசுவின் சிலுவைச் சாவு சீடர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. ஆனால், அவருடைய உயிர்ப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. இயேசுவின் சீடர் மட்டுமல்ல, அவருடைய தரிசனம் கிடைத்தவர் அனைவரும் இவ்வாறு மகிழ்ச்சி
கொள்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் பயங்கரமான சிலுவைச் சாவு அவருடைய சீடர்களின் மனநிம்மதியைத் தகர்த்தெறிந்தது. அவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்தனர். ஆனால், உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவர்களுக்குப் பலமுறை காட்சியளித்து அவர்களைத் தேற்றியதால் அவர்கள் நம்பிக்கை கொண்டனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தூய ஆவியார் அவர்களை ஆட்கொண்டபோது அவர்கள் வல்லமை பெற்று உலகின் கடையெல்லைவரை இயேசுவின் நற்செய்தியை பறை சாற்றினர்.

‘‘சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நின்றீர்கள். நான் உலகிற்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள். இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக் கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே. மறை நூலில் எழுதியுள்ளவாறு, கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் காட்சியளித்தார். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்று எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகி விடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்? இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார்யெனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நான் பறை சாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம். ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், கிறிஸ்துவை, கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?

கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம். ஆனால், இப்போதோ இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல், ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானதுபோலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து, ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.

சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும். ஏனெனில், ‘‘கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.’’ ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது. அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.’’ (1 கொரிந்தியர் 15: 1-28) நமது உள்ளத்தைக் கபடமற்றதாக வைத்துக்கொள்வோம். அதனை இறைவனை நோக்கி உயர்த்துவோம். ஏனெனில், நிலையான உறைவிடமே நமக்கு இங்கு இல்லை. நமது நித்திய பிரார்த்தனைகளையும் இறைவனை அடையும்பொருட்டு விம்மி அழும் நமது அழுகையையும் கண்ணீரையும் அவரை நோக்கிச் செலுத்துவோம். இதன் பயனாக, மரணத்திற்குப் பின் நமது ஆன்மா மகிழ்ச்சி பொங்க இறைவனை நோக்கிச் செல்லும் தகுதி பெற்றிருப்பதைக் காண்போம். தூய மனச்சான்று உடையவர்கள், எளிதில் திருப்தியும், சாந்தியும் அடைவார்கள். அமைதியும் முக்தியும் பெறுவதற்குரிய இவ் வழிமுறைகளைப் பின்பற்றி நடப்போம்.

இவ்வுலகில் நாம் ஒரு வழிப்போக்கன் போலவும் சம்பந்தப்படாத அந்நியன் போலவும் இவ்வுலக விவகாரங்களோடு சிறிதும் தொடர்பற்றவன் போலவும் நம் மனநிலையை அமைத்துக் கொள்வோம். அருள்நிலை அடைந்த பெரியோர்களை மதிப்பதனாலும் அவர்களைப் பின்பற்றி நடப்பதனாலும் அவ்வருளாளர்களை நமக்கு நண்பர்களாக்கிக் கொள்வோம். இவ்வுலகில் இடுக்கண் உற்றாலும் அவர்களால் அழியா நிலையுள்ள உலகத்தில் ஏற்கப்படுவோம். பெரும்பாலான மனிதர்கள் துயரத்தோடு தான் வாழ்கிறார்கள். வறுமை, நோய், துன்பங்கள், தோல்வி, ஏமாற்றம் என்று எத்தனையோ துயரங்கள், வேதனைகள்! ஆனால் இவற்றைவிடப் பெரிய வருத்தம்தான் தனிமையுணர்வு. என்னை அன்பு செய்ய, எனக்கு உதவி செய்ய, ஆறுதல் கூற எவருமில்லை என்ற உணர்வுதான் மிகுந்த வேதனை தருவது. ஒருவரும் இல்லாதவர்களுக்கு இறைவன்தான் துணை என்னும் எண்ணம் மட்டும்தான் உண்மையான ஆறுதலாக இருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் கூட தனிமைப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. ஆழ்ந்த துயரத்தின்போது தமது அருமைச்சீடர்கள்கூட தம்மைக் கைவிடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த இயேசு பின்வருமாறு கூறினார். ‘‘ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன்’’ (யோவான் 16:32-33) யார் நம்மைக் கைவிட்டாலும் ஒருபோதும் கைவிடாத இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு வேண்டும். நம் உள்ளத்தில் குடியிருக்கும் இறைவனிடம் ஆறுதல் காண வேண்டும். அப்போது உண்மையான மகிழ்ச்சி நிறைவாகக் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு நடிகை வந்த நடிகை
» மீண்டு(ம்) வருகிறார் நமீதா…!
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
» பெயர் வந்த கதை...
» என் வயது 33. மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கணவர் விபத்தில் இறந்து விட்டார். அந்த துக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை. உறவினர்கள் மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். என் மனம் அதை ஏற்கவில்லை. இன்னமும் உயிர் வா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum