தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிளம்பியது ஆதிபகவான் டீம்

Go down

கிளம்பியது ஆதிபகவான் டீம் Empty கிளம்பியது ஆதிபகவான் டீம்

Post  ishwarya Thu Mar 07, 2013 5:43 pm

ஆதிபகவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 6ஆம் தேதி கனடா தலைநகர் டொரன்டோவில் நடக்கிறது. யுவனின் இசை நிகழ்ச்சியுடன். இதில் கலந்து கொள்ள ஜெயம் ரவி உள்ளிட்ட ஆதிபகவான் டீம் டொரன்டோ கிளம்பிச் சென்றது.

அமீர் கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவான் படத்தை இயக்கி வருகிறார். பருத்திவீரனுக்குப் பிறகு அவர் இயக்கும் படம். ஜெயம் ரவி சிபிஐ அதிகா‌ரியாக நடித்திருப்பதாக கேள்வி. தாடியுடன் வருவதால் மற்ற படங்களில் அவரால் நடிக்க முடியாமலிருந்தது. சில மாதங்கள் முன்புதான் அவரை தனது படத்திலிருந்து ‌ரிலீஸ் செய்தார் அமீர். விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் நிமிர்ந்து நில், பூலோகம் என்ற இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

ஆதிபகவானின் பெரும்பகுதி பாங்காங்கில் எடுக்கப்பட்டது. இப்போது பாடல் வெளியீட்டையும் வெளிநாட்டில் வைத்துள்ளனர். ஏதாவது சானலுக்கு விற்பதற்கு இது உதவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum